ஒமிக்ரான் அச்சுறுத்தல் : தள்ளிப்போன இந்தியா – தென்னாப்ரிக்கா கிரிக்கெட் தொடர்… ரசிகர்கள் வருத்தம்..!!!

Author: Babu Lakshmanan
4 December 2021, 1:13 pm
india vs south africa - updatenews360
Quick Share

இந்தியா – தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா அணி தற்போது நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடன் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடர் முடிந்த பிறகு, தென்னாப்பிரிக்காவிற்கு சென்று தலா 3 டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுடன், 4 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுவதாக இருந்தது.

இந்த நிலையில், தென்னாப்ரிக்கா மற்றும் அதன் பக்கத்து நாடுகளில் உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், தென்னாப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பயணிகள் வர பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. மேலும், பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இப்படியிருக்கையில், ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக, இந்தியா – தென்னாப்ரிக்கா கிரிக்கெட் தொடரை ஒத்திவைப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. எனினும், தென்னாப்ரிக்காவில் நடக்கும் டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் இந்திய அணி பங்கேற்க சம்மதித்துள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இந்திய அணி ரத்து செய்திருப்பது குறிப்பிடத்தக்கது

Views: - 1134

0

0