பாக்., பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

Author: Udhayakumar Raman
20 March 2021, 7:04 pm
Quick Share

பாகிஸ்தான் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் இம்ரான் கான். இவர் தற்போது பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக உள்ளார். இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 68 வயதான இம்ரான் கானுக்கு நோயின் லேசான அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தன்னைத்தானே தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

இதற்கிடையில் இரண்டு நாட்களுக்கு முன் தான் இவருக்கு கொரோனா வைரஸுக்கான முதல் தடுப்பூசி போடப்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்றுக்கொண்டார். கொரோனா வைரஸ் பரவியது முதல் பாகிஸ்தானின் முழுமையான ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது. இது ‘ஸ்மார்ட் ஊரடங்கு’ என்ற பெயரில் அழைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பொது இடங்களுக்கு அதிக அளவில் காணப்பட்டார் இம்ரான் கான். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதோடு, மக்களைச் சந்தித்தது, பல நலத்திட்டங்களை அவர் துவங்கி வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களைச் சோதனை செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் காரணமாகப் பாகிஸ்தானில் மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸால் 6 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 14 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளனர்.

கடந்த 2020 பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் முதல் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையில் கடந்த மாதம் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை வேகமாகப் பரவத் துவங்கியுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பஞ்சாபில் உள்ள அனைத்து உணவு விடுதிகளும் தற்காலிகமாக மூடப்பட்டது. பொதுமக்கள் மாஸ்க் அணிவதையும் அங்குக் குறைத்துக் கொண்டதால் பாகிஸ்தானின் அத்தியாவசியமான வணிகத்தைத் தவிர மற்ற அனைத்து வணிகங்களும் மூடும் படி அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கு முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Views: - 178

0

0