இங்.,க்கு எதிரான 3வது டி20 போட்டியில் பாகிஸ்தான் போராடி வெற்றி : தொடரையும் சமன் செய்தது!!

2 September 2020, 1:12 pm
england - pakistan 1- updatenews360
Quick Share

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரையும் சமன் செய்தது.

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் கலந்து கொண்டது. முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2வது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இதில், முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியின் ஹைதர் அலி (54), அனுபவ வீரர் முகமது ஹபீஸ் (86) ரன்கள் விளாச, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது.

191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு, டாம் பான்டன் மட்டும் அதிரடி காட்டினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுக்களை இழந்தனர். பரபரப்பாக சென்ற இந்தப் போட்டியில், கடைசி 2 ஓவரில் 20 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

அபாரமாக ஆடி 33 பந்தில் 61 ரன்கள் எடுத்த மொயின் அலி தனது விக்கெட்டை பறி கொடுத்ததால் இங்கிலாந்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இறுதியில் 2 பந்துகளில் 12 ரன்கள் தேவைபட்ட போது, 5-வது பந்தை டாம் கர்ரன் சிக்சருக்கு தூக்கினார். கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தால் வெற்றி என்ற நிலையில், அவரால் அடிக்க முடியவில்லை.

இதனால், இங்கிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம் 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.பாகிஸ்தான் அணியின் முகமது ஹபீஸ் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை பெற்றார்.

Views: - 6

0

0