பாராலிம்பிக் போட்டி : டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி!!!

Author: Udayachandran RadhaKrishnan
27 August 2021, 7:29 pm
Bhavina Patel -Updatenews360
Quick Share

டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை பவினாபென் படேல் அபாரமாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இருந்து 54 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில், டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை பவினா பென் படேல் அரையிறுதிக்கு தகுதிபெற்று இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்தார்.

காலிறுதி போட்டியில் உலகின் நம்பர் 2 வீராங்கனையான செர்பியாவை சேர்ந்த பெரிக் ரன்கோவிக்கை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார். செர்பியாவை 11-5, 11-6, 11-7 என்ற செட்கணக்கில் வீழ்த்தி, பவினா அரையிறுதிக்கு முன்னேறியதால், இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

Views: - 361

0

0