பாராலிம்பிக்கில் முதல் பதக்கத்தை உறுதி செய்தார் பவீனா படேல்… டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

Author: Babu Lakshmanan
28 August 2021, 10:42 am
Quick Share

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியின் டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் இந்தியாவின் பவீனா படேல் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியிர் இந்தியா, அமெரிக்கா உள்பட 162 நாடுகளைச் சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

டோக்கியோ பாராலிலிம்பிக் போட்டியின் டேபிள் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் இந்தியாவின் பவீனா பட்டேல் அமர்ந்த நிலையில், உலக தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள சீன வீராங்கனை ஜேங்க் மியோவை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியில் 7-11, 11-7, 11-4, 9-11, 11-8 என்ற கணக்கில் வெற்றி பெற்ற பவீனா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

நாளை நடக்கும் இறுதி சுற்றில் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சீன வீராங்கனை ஜோ யிங்கை எதிர்கொண்டு விளையாட இருக்கிறார்.

Views: - 395

0

0