வெள்ளி வென்றார் மாரியப்பன்… விழிபிதுங்கிய அமெரிக்க வீரர்…!! இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 10ஆக உயர்வு..!!

Author: Babu Lakshmanan
31 August 2021, 5:42 pm
mariyappan thangavelu - updatenews360
Quick Share

பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கியது. இத்தொடர் வரும் செப்டம்பர் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 163 நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 மாற்றுத் திறனாளி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிக்காட்டி வருகின்றனர். இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் கொண்ட அணி பங்கேற்று விளையாடி வருகிறது.

இந்த நிலையில், பாராலிம்பிக்கின் டி63 உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் உறுதியாகியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, 1.86 மீட்டர் தாண்டி 2வது இடத்திலும், சக இந்திய வீரர் 1.83 மீட்டர் தாண்டி 2வது இடத்திலும் உள்ளனர்.

இதுவரை பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவிற்கு இரு தங்கம், 5 வெள்ளிப் பதக்கம், 3 வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்கள் கிடைத்துள்ளன. பதக்கப்பட்டியலில் இந்தியா 30வது இடத்தில் உள்ளது.

Views: - 374

0

0