டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தின் ஓராண்டு தடையை பற்றி ரிக்கி பாண்டிங் உருக்கம்…!

13 February 2020, 5:01 pm
Quick Share

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியில் பந்தின் மீது சாண்ட் பேப்பர் பயன்படுத்திய குற்றத்திற்காக அந்த அணியின் நட்சத்திர வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு ஓராண்டும் பணிகிராப்ட் என்னும் வீரருக்கும் ஒன்பது மாதம் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.


இந்த தடையை பற்றி அந்நாட்டு அணியின் முன்னாள் கேப்டன் பற்றும் நட்சத்திர பேட்ஸ்மேனான ரிக்கி பாண்டிங் “இந்த சம்பவம் நிகழ்வதற்கு முக்கிய காரணம் எங்களுடைய ரிடைர்மெண்ட்டும் தான். அப்போது அந்த அணியில் அனுபவமிக்க ஒரு வீரர் இருந்திருந்தால் கூட இந்த சம்பவத்தை நடக்கவிடாமல் தடுத்திருப்போம்”


மேலும் அவர் “ஆஸ்திரேலியா அணியின் வருங்காலத்தைப்பற்றி நினைக்கும் பொது மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. தற்போது ஆஸ்திரேலியா அணியில் அனுபவமிக்க வீரர்கள் மிகவும் சிலர் தான். அவர்களும் இன்னும் ஓராண்டிற்குள் விடைப்பெற்றுவிடுவார்கள்.” என்று மிகவும் உருக்கத்துடன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Leave a Reply

error: Content is protected !!