24 ஆண்டுக்கால சாதனையைத் தகர்த்த அறிமுக வீரர் பிரசித் கிருஷ்ணா!

Author: Udhayakumar Raman
24 March 2021, 8:26 am
Quick Share

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அசத்திய இந்திய அறிமுக வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 24 ஆண்டுக்கால சாதனையைத் தகர்த்து அசத்தினார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் மார்கன் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 318 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. கடின இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 42.1 ஓவரில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 66 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோல்வியைச் சந்தித்தது. இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

விநோதமாக 16 பந்தில் சேதமடைந்த பந்து… முதல் ஒருநாள் போட்டியில் அரங்கேறிய சம்பவம்!

பிரசித் அசத்தல்
இந்நிலையில் இந்த போட்டியில் அறிமுக வீரராகக் களமிறங்கிய பிரசித் கிருஷ்ணா, சுமார் 24 ஆண்டுக்கால சாதனையைத் தகர்த்தார். இந்திய அணிக்காக அறிமுகமான முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரரானார் பிரசித். இவர் இந்த போட்டியில் 8.1 ஓவர்கள் வீசி 54 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

24 ஆண்டு கால சாதனை
முன்னதாக கடந்த 1997 இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அறிமுகமான இந்திய வீரர் நோயல் டேவிட் 21 ரன்களுக்கு 3 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. சமீபத்தில் இந்த சாதனையைத் தகர்க்க மிக அருகாமையில் சென்ற வீரர் இந்திய ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. இவர் 2016 இல் தரம்சாலாவில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 31 ரன்களுக்கு 3 விக்கெட் வீழ்த்தினார். இந்த போட்டியில் பிரசித் கிருஷ்ணா சுமார் 24 ஆண்டுகளாகத் தகர்க்கப்படாமல் இருந்த சாதனையைத் தகர்த்து அசத்தினார். மேலும் அறிமுக போட்டியில் 4 விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையும் பெற்றார் பிரசித்.

Views: - 118

7

1