ப்ரீத்தி ஜிந்தா இல்லாத ஐ.பி.எல். ஏலம்..! ஏக்கத்தில் ரசிகர்கள்..!
Author: Rajesh11 February 2022, 4:45 pm
இந்தியன் ப்ரீமியர் லீக் டி 20 போட்டிகள் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் கவனிக்கப்படும் போட்டி தொடராக உள்ளது. கடந்த ஆண்டு வரை ஐபிஎல்லில் 8 அணிகள் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு புதிதாக 2 அணிகள் சேர்த்து மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளன.
இதற்கான வீரர்கள் தேர்வு ஏலம் நாளை நடைபெற உள்ளது. இதில் அனைத்து அணி உரிமையாளர்களும் பங்கேற்று வீரர்களை ஏலத்தில் எடுக்க உள்ளனர். குறிப்பாக ஐ.பி.எல். ஏலத்தின் போது அதிகம் கவனிக்கப்படுபவர் தான் நடிகையும், ராயல் சேலஞ்சர்ஸ் அணி உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா.
முக்கியமாக தன்னை சுற்றி எப்போதும் கேமரா சரியாக இருக்கும்படி கவனமாக பார்த்துக் கொள்வதில் கில்லாடி. இந்த நிலையில், ட்விட்டரில் பதிவிட்டுள்ள தான் நாளை நடைபெறும் ஏலத்தில் கலந்துகொள்ளவில்லை என தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களை மட்டுமின்றி ஏலத்தில் படம் பிடிக்கும் புகைப்பட கலைஞர்களையும் வருத்தமடைச் செய்துள்ளது.
‘கடந்த சில நாட்களாக ஏலம் குறித்தும் வீரர்கள் குறித்தும் என்னுடைய அணியிடம் நிறைய ஆலோசனைகள் நடத்தியுள்ளேன். ரசிகர்களே வீரர்கள் தேர்வு குறித்து உங்களின் பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது’ என ட்டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.