இந்தியாவுக்கு மேலும் ஒரு பெருமை: உலக மல்யுத்த போட்டியில் பிரியா மாலிக் தங்கம் வென்று அபாரம்…!!

Author: Aarthi
25 July 2021, 3:58 pm
Quick Share

ஹங்கேரி: ஹங்கேரியில் நடைபெற்று வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

ஒலிம்பிக்ஸ் போட்டி மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் நடைபெறும் பல போட்டிகளிலும் இந்திய வீராங்கனைகள் பதக்கங்களை வென்று வருகின்றனர். ஹங்கேரி நாட்டு புடாபெஸ்டில் உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது.

இந்தியாவிற்கு கிடைத்தது அடுத்த தங்க பதக்கம்… மல்யுத்த வீராங்கனை பிரியா  மாலிக் அட்டகாச வெற்றி! - TopTamilNews

இந்த தொடரில் 73 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற பிரியா மாலிக், பெலாரஸ் என்ற வீராங்கனையுடன் மோதினார். ஆரம்பத்திலிருந்தே ஆவேசமாகவும் சாதுர்யமாகவும் விளையாடிய மாலிக் ஆட்டத்தின் முடிவில் 5-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றார்.

முதலிடம் பிடித்து இந்தியாவிற்காக தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார். முன்னதாக 43 கிலோ எடைப்பிரிவில் தன்னு தங்கம் வென்றிருந்தார். ஒலிம்பிக்ஸில் பளுதூக்குதலில் மீரா பாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று கொடுத்ததை தொடர்ந்து, தற்போது பிரியா மாலிக்கும், தன்னும் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

Views: - 360

0

0