“தனிமையாக இருப்பது எனக்கு மன அழுத்தத்தை தருகின்றது” – பிரபல டென்னிஸ் வீராங்கனை வருத்தம்…!

22 March 2020, 2:03 pm
Quick Share

உலகம் முழுவதும் கொரோனாவால் கிட்டத்தட்ட 12000 உயிர்கள் பறிப்போன நிலையில் மக்கள் பீதியடைந்து வருகின்றனர். விளையாட்டு, வர்த்தகம் மற்றும் பல துறைகளில் யாரும் எதிர்பார்த்திராத வகையில் பின்னடைவை சந்தித்து வருகின்றன. குறிப்பாக சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பாதிப்பு அதிகமாக காணப்பட்டுவருகிறது.


இந்நிலையில் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் தற்போது நிலவிவரும் சூழ்நிலையைப்பற்றி அவரது கருத்தினை வெளியிட்டுள்ளார். “என்ன தான் கொரோனாவால் உயிர் போகுமென்று மனிதர்களை தனிமை படுத்தினால் இந்த நிலை நீடித்தால் இந்த தனிமையே மக்களை கொன்றுவிடும்”


“கடந்த ஒரு வாரமாக நான் தனியாக இருக்கின்றேன். எனது மகளைக்கூட நான் பார்க்கவில்லை. அவளுடன் நேரத்தை செலவளிக்கவில்லை. இதனால் என்னுடைய உடல் மன அழுத்தத்திற்கு ஆளாக்கியுள்ளது. இதுவும் கொடூரமான வியாதிதான். இந்த நிலை மக்களுக்கு வந்தால் கொரோனாவைவிட பேரிழப்பு ஏற்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply