என்னாச்சு டூபிளசிஸுக்கு… என்னை கொன்றுவிட்ட தருணம்… பதறிய மனைவி : அதிர்ச்சியில் சென்னை ரசிகர்கள்..!!

13 June 2021, 2:46 pm
duplessis - updatenews360
Quick Share

பிஎஸ்எல் எனப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 19வது கிரிக்கெட் தொடர் அபுதாபியில் நடந்து வருகிறது. நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் குவெட்டா கிளாடியேட்டர் மற்றும் பெஷாவர் ஜால்மி அணிகள் மோதின. இதில், குவெட்டா அணி பீல்டிங் செய்திருந்த போது, போட்டியின் 7வது ஓவரில் மில்லர் அடித்த பந்தை, பவுண்டரிக்கு போகாமல் தடுக்க தென்னாப்ரிக்க அணியின் வீரர் டூபிளசிஸ் முயன்றார்.

அப்போது, பவுண்டரி எல்லையில் குணிந்து பந்தை தடுக்க முயன்ற போது, அவருக்கு எதிர்புறமாக ஓடி வந்த சக வீரர் முகமது ஹஸைனின் கால்களில் டூபிளசிஸின் தலை பயங்கரமாக மோதியது. இதில், அவர் பலத்த காயமடைந்து, மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். இதையடுத்து, அணி மருத்துவர் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார்.

இதையடுத்து, டு பிளசிஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. காயத்தால் டூபிளசஸிஸ் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக போட்டியில் அயூப் விளையாடினார்.

இதனிடையே, செப்டம்பர் மாதம் ஐபிஎல் கிரிக்கெட்டின் எஞ்சிய போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், சென்னை அணியின் முக்கிய வீரரான டூபிளசிஸிக்கு ஏற்பட்டுள்ள காயம் சென்னை ரசிகர்களை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

போட்டியின் போது டூபிளசிஸிக்கு காயம் ஏற்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு, “என்னை கொன்றுவிட்ட தருணம் இது… கட்டாயம் மருத்துவமனையில் பரிசோதிக்க வேண்டும்,” என டூபிளசிஸின் மனைவி டுவிட் செய்துள்ளார்.

Views: - 441

0

1