அஸ்வினுடனான மினி யுத்தத்திற்கு நான் எப்பவோ ரெடி… ஜோ ரூட்!

4 February 2021, 9:21 pm
Quick Share

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் உடனான சவாலுக்கு தான் தயாராக உள்ளதாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி நாளை சென்னையில் துவங்குகிறது. இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக கேப்டன் ஜோ ரூட் திகழ்ந்து வருகிறார். இலங்கை அணிக்கு எதிரான கடைசியாக இங்கிலாந்து அணி பங்கேற்ற டெஸ்ட் தொடரில் ஜோ ரூட் சிறப்பாக விளையாடினார்.

இந்திய அணிக்கு எதிராகவும் தனது சிறந்த பார்மை தொடர ரூட் திட்டமிட்டுள்ளார். குறிப்பாக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய ஆடுகளத்தில் கண்டிப்பாக அஸ்வினுடன் சவாலை எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜோ ரூட் கூறுகையில், “அவருக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தவும் பார்க்கமாட்டேன். அதேநேரம் தடுப்பாட்டம் ஆடவும் நினைக்க மாட்டேன். ஆனால் வரும் பந்தை எதிர்கொண்டு ரன்கள் சேர்க்க முயற்சிப்பேன். அதேபோல சிறிது நேரத்தில் நான் களத்தில் தாக்குப்பிடித்தாலே இந்த இந்திய ஆடுகளத்தில் அதிக ரன்களை குவிக்க முடியும் என நினைக்கிறேன்.

இந்திய மண்ணில் அஸ்வின் மிகப்பெரிய சாதனை படைத்துள்ள வீரராவார். அதேபோல ஆஸ்திரேலிய அணியின் வெற்றி அவருக்கு மிகவும் உற்சாகம் அளித்துள்ளது. இதனால் அதிக தன்னம்பிக்கையுடனும் தொடர்களில் களமிறங்க உள்ளார். அவருக்கு எதிராக இதற்கு முன்பாகவும் நான் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். ரன்கள் குவித்துள்ளேன் அவரும் சில சமயங்களில் என் விக்கெட்டை கைப்பற்றி உள்ளார். என்னை பொறுத்தவரையில் சவாலாக கருதுகிறேன். அப்போது தான் நமக்குள் இருக்கும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்” என்றார்.

Views: - 0

0

0