ரெய்னா, ஹர்பஜனை நிரந்தரமாக கழற்றி விட சென்னை சூப்பர் கிங்ஸ் முடிவு..! காரணம் இதுதான்..?

Author: Babu
2 October 2020, 11:32 am
raina - harbajan - updatenews360
Quick Share

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ள ரெய்னா மற்றும் ஹர்பஜன்சிங்கின் ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. வழக்கமாக, அதிரடி ஆட்டம் காட்டும் சென்னை அணி, தனது மோசமான ஆட்டத்தினால் ஐபிஎல் வரலாற்றிலேயே முதல்முறையாக புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. காரணம், சென்னையின் முக்கிய வீரர்களான சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங் ஆகியோர் சொந்த காரணங்களுக்காக கடைசி நிமிடத்தில் தொடரில் இருந்து விலகியதே ஆகும்.

இதனிடையே, அறை ஒதுக்குவதில் சென்னை அணியின் நிர்வாகத்திற்கும், ரெய்னாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்தான், அவர் இந்தத் தொடரில் இருந்து விலகியதாகவும் கூறப்பட்டு வந்தது. இதனால், சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா இனி விளையாட மாட்டார் என்ற தகவலும் நிலவி வந்தது. ஆனால், இவையனைத்திற்கும் ரெய்னா மறுப்பு தெரிவித்திருந்தார்.

தற்போது, ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் மீது சென்னை அணி நிர்வாகத்திற்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இருவரின் ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ள அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருவரிடையேயும் 2018ம் ஆண்டு 3 ஆண்டு காலம் ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில், அதனை முடித்துக் கொள்ள இருப்பதால், அடுத்த ஆண்டு ஐபிஎல் வீரர்களின் ஏலம் பட்டியலில் ரெய்னாவின் பெயர் இடம்பெற்றிருக்கும். இதுவரைக்கும் சென்னை அணிக்காக விளையாடி வந்த ரெய்னா, அடுத்த ஆண்டு வேறு அணிக்காக விளையாடுவதும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. சென்னை அணி நிர்வாகத்தின் இந்த முடிவு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Views: - 42

0

0