ஏமாற்றிய சென்னை பேட்ஸ்மேன்கள்: ராஜஸ்தான் அணிக்கு 189 ரன்கள் இலக்கு!

19 April 2021, 9:27 pm
Quick Share

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 12வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது.

இந்தியாவில்14வது ஐபிஎல் தொடர் தற்போது நடக்கிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் 12வது லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்கியது.

இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ருதுராஜ் (10), டுபிளசி (33) சொதப்பலான துவக்கம் அளித்தனர். பின் வந்த மொயின் அலி (26) ஓரளவு கைகொடுத்தார். ரெய்னா (18) நிலைக்கவில்லை. அடுத்து வந்த அம்பதி ராயுடு (27) ஓரளவு கைகொடுத்தார்.

அதிரடி காட்டிய கேப்டன் தோனி 18 ரன்னில் சகாரியா வேகத்தில் வெளியேறினார். ரவிந்திர் ஜடேஜா (8) ஏமாற்றினார் கடைசி நேரத்தில் சாம் கரன் (13) ஓரளவு கைகொடுக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 188 ரன்கள் அடித்தது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 189 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

Views: - 107

0

0