பஞ்சாப் அணியின் கனவை கலைத்த கார்த்திக் தியாகி; ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றி

Author: Udhayakumar Raman
22 September 2021, 12:21 am
Quick Share

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு யஸ்ஸஸ்வி ஜெய்ஸ்வால் 49 ரன்களும், அதிரடியாக விளையாடிய லம்ரோர் 43 ரன்களும், ஈவின் லீவிஸ் 36 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 185 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான கே.எல் ராகுல் 49 ரன்களும், மாயன்க் அகர்வால் 67 ரன்களும் எடுத்து மிக சிறப்பான துவக்கம் கொடுத்தனர்.வெற்றிக்கு தேவையான 60 சதவீத ரன்களை துவக்க வீரர்களே அசால்டாக எடுத்து கொடுத்துவிட்டதால் பஞ்சாப் அணி ஈசியாக இந்த போட்டியில் வெற்றி பெறும் என கருதப்பட்டது. அதற்கு ஏற்றார்போல் மூன்றாவது நிக்கோலஸ் பூரனும், நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கிய நிக்கோலஸ் பூரணும் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் மூலம் கடைசி ஒரு ஓவரில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 4 ரன்களை தேவை என்ற நிலை ஏற்பட்டது.

180 ரன்களை அசால்டாக எடுத்த பஞ்சாப் அணியால் 6 பந்துகளில் 4 ரன்கள் எடுக்க முடியாத என்றே அனைவரும் நினைத்த நிலையில், கடைசி ஓவரை வீசிய கார்த்திக் தியாகி வெறும் ஒரு ரன் மட்டுமே விட்டுகொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி பஞ்சாப் அணியை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிற்கும் ஷாக் கொடுத்தார். இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக கார்த்திக் தியாகி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதே போல் ராகுல் திவாடியா மற்றும் சேத்தன் சக்காரியா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

Views: - 369

0

0