ரசிகர்களை ஏமாற்றிய சென்னை அணி : வாழ்வா.. சாவா ஆட்டத்திலும் மோசமான ஆட்டம்..! புள்ளிப்பட்டியலில் மீண்டும் கடைசி இடம்

19 October 2020, 11:11 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவியது.

டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அந்த அணிக்கு, தோனியும், ஜடேஜாவும் ஜோடி சேர்ந்து மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டனர். ஆனால், இருவரும் ரன்களை குவிக்க மறந்தனர். இதனால், சென்னை அணியின் ஸ்கோர் பந்துக்கு ஒரு ரன் வீதமே வந்தது. ஒரு கட்டத்தில் தோனி (28), ரன் அவுட்டில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய ஜடேஜா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 35 ரன்கள் சேர்த்தார். இதனால், சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே அடித்தது.

இதைத்தொடர்ந்து, எளிய இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி 30 ரன்கள் எடுப்பதற்குள் 3 முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளால் இழந்து தடுமாறியது. பின்னர், ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்மித் மற்றும் பட்லர் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். பட்லர் அதிரடியாக ஒருபுறம் ஆட, மறுமுனையில் ஸ்மித் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் 18வது ஓவரில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த பட்லர் (70), ஸ்மித் (28) எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி 6வது இடத்திற்கு முன்னேறியது. சென்னை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Views: - 22

0

0