பெங்களூரு ஆல் ரவுண்டர் டேனியல் சாம்ஸுக்கு கொரோனா தொற்று உறுதி!

7 April 2021, 11:39 am
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் டேனியல் சாம்ஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆல் ரவுண்டர் டேனியல் சாம்ஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அனைத்து வீரர்களும் கட்டாய தனிமைப்படுத்துதலாக 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையில் இவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த தனிமைப்படுத்துதலின் பாதியில் உள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான டேனியல் சாம்ஸுக்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று சோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சாம்ஸு டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக மாற்றம் செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் 3ம் தேதி சென்னை வந்தடைந்தார். இந்நிலையில் இன்று இவருக்கு நடத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று சோதனையில் இவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட இரண்டாவது பெங்களூரு வீரரானார் சாம்ஸ். இந்நிலையில் முன்னதாக தேவ்தத் படிக்கலுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் கடைசியாக இவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா வைரஸ் சோதனையில் இவருக்கு கொரோனா இல்லை என முடிவு கிடைத்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வரும் 9ம் தேதி நடக்கவுள்ள முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

Views: - 3

0

0