‘போட்டி தோல்வியே ஜீரணிக்க முடியல்ல… ரூ.12 லட்சம் அபராதம் வேறயா’…!! அடிமேல் அடி வாங்கும் கோலி..!

25 September 2020, 10:56 am
virat-kohli upset- updatenews360
Quick Share

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் பெங்களூரூ – பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், டாஸ் வென்ற விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய பஞ்சாப் அணி, கேப்டன் ராகுலின் சதத்தினால் 3 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் சேர்த்தது.

கடினமாக இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூரூ அணி, 17 ஓவர்களில் 109 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், பஞ்சாப் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் ஐ.பி.எல். விதிகளின் கீழ் குறைவான பந்து வீச்சைக் கொண்ட தவறுக்காக பெங்களூரூ அணியின் கேப்டன் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Views: - 5

0

0