ஒரே ஓவரில் 7 சிக்ஸ் அடித்து சாதனை : விஜய் ஹசாரே தொடரில் ருத்ரதாண்டவம் ஆடிய ருத்ராஜ் கெய்க்வாட்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 November 2022, 1:14 pm
Gaikwad- Updatenews360
Quick Share

இந்தியாவில் 50 ஓவர்களை கொண்ட விஜய் ஹசாரே கோப்பைத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் உத்தபிரதேச அணிக்கு எதிரான போட்டியில் மகாராஷ்டிரா வீரர் ருதுராஜ் புதிய சாதனை படைத்தார்.

இதில் முதலில் ஆடிய மகாராஷ்டிரா அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் எடுத்துள்ளது. இதில் ருதுராஜ் கெய்க்வாட் இரட்டை சதம் விளாசியிள்ளார்.

குறிப்பாக 50 ஓவரை வீசிய உத்தரபிரதேச பவுலர் சிவா சிங் வீசிய அனைத்து பந்துகளையும் சிக்சருக்கு விளாசி புதிய சாதனை படைத்துள்ளார்.

ஒரு ஓவரில் அவர் நோ பாலை சேர்த்து ஏழு பந்துகளை வீசியுள்ளார். 7 பந்துகளை சிக்ஸராக அடித்து புதிய சாதனை படைத்துள்ளார் கெய்க்வாட்.

Views: - 211

1

0