திரும்புமா 2018 வரலாறு… மெல்போர்னில் இதான் இந்தியாவின் சாதனை!

22 December 2020, 10:14 pm
Quick Share

அடிலெய்டு படுதோல்விக்குப் பின் இந்திய கிரிக்கெட் அணி இரண்டு ஆண்டுக்கு முன் போல மெல்போர்ன் மைதானத்தில் வெற்றியை வசப்படுத்தும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி இதுவரை இல்லாத அளவு படுமோசமான தோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 26ஆம் தேதி மெல்போர்னில் துவங்குகிறது.

இந்திய அணி படுமோசமான தோல்வியிலிருந்து மீண்டு வரவேண்டிய நிலையில் உள்ளது. ஆனால் மொல்போர்ன் மைதானத்தில் இந்திய அணி பங்கேற்ற போட்டிகளின் முடிவு இந்திய அணிக்கு சாதகமாக இல்லை. இங்கு இந்திய அணி பங்கேற்ற 13 போட்டியில் இந்திய அணி வெறும் 3 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. எட்டு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ள இந்திய அணி, 2 போட்டிகளை டிரா செய்துள்ளது.

ஆனால் கடந்த டிசம்பர் 2018 இல் மெல்போர்னில் நடந்த டெஸ்டில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் கடந்த 2018-19இல் இந்திய அணி 2-1 என டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற இந்த மெல்போர்ன் டெஸ்ட் போட்டி வெற்றி மிக முக்கிய பங்குவகித்தது. அதேபோல 2014இல் மெல்போர்னில் நடந்த டெஸ்ட்டையும் இந்திய அணி டிரா செய்துள்ளது.

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியின் முதல் டெஸ்ட் போட்டி வெற்றியும் இதே மெல்போர்ன் (1977) மைதானத்தில் தான். ஆனால் இம்முறை கோலி, ஷமி இல்லாதது என சில சிக்கல்களில் உள்ளது இந்திய அணி. ஆனால் புது லெவன் அணியுடன் இந்திய அணி களமிறங்கினாலும், கடந்த முறை போல மெல்போர்னில் அசத்தி இந்த டெஸ்ட் தொடர்ந்து தொடரில் உயிர்ப்புடன் இருக்கக் கண்டிப்பாக வெற்றிபெற வேண்டிய நிலையில் உள்ளது.

Views: - 0

0

0