“இது தாங்க நீங்க நெனச்ச ஸ்ப்ரிங் பேட்” – இந்த நாள் உலக கோப்பையை வென்ற ரிக்கி பாண்டிங்கின் பேட்…!

23 March 2020, 3:04 pm
Quick Share

கடந்த 2003 ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஐம்பது ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் சௌரவ் கங்குலியின் தலைமையில் இந்திய அணியும் ரிக்கி பாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலியா அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்று மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது.


இந்த போட்டியில் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆட்டமிழக்காமல் சிறப்பாக விளையாடி 140 ரன்கள் எடுத்தார். இந்த ஆட்டத்தில் அவர் ஸ்ப்ரிங் பேட் பயன்படுத்திதான் அந்த ஸ்கோரை அவர் அடித்தாரென்று ஒரு செய்தி பரவலாக இருந்தது. மார்ச் 23 அதாவது 17 வருடத்திற்கு முன்பு இதே நாளன்று அவர் பயன்படுத்திய பேட்டின் புகைப்படத்தை அவர் வெளியிட்டார்.


அந்த புகைப்படத்தில் “இது தாங்க நீங்க நெனச்ச ஸ்ப்ரிங் பேட். கொரோனா வந்ததுல இருந்து இந்த பேட்ட நா தொடப்போறது இல்ல” என்று நகைச்சுவையாக ஒரு பதிவையும் சேர்த்து பகிர்ந்துள்ளார். இந்த போஸ்ட் தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது. ரிக்கி பாண்டிங் தற்போது IPL அணியான டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளராக பணியாற்றிவருகிறார்.

Leave a Reply