தொடரும் ரிஷப் பண்ட் ‘90’ சோகம்… கொஞ்சம் மாற்றம் அவசியம்!

7 February 2021, 8:24 pm
Quick Share

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மீண்டும் 90களில் அவுட்டானார்.

இந்தியா வந்த இங்கிலாந்து கிரிக்கெட் அண், 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடக்கிறது. இதன் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 578 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 257 ரன்கள் எடுத்து 321 ரன்கள் பின் தங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், 91 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதன் மூலம் தொடர்ச்சியாக இந்திய மண்ணில் மூன்றாவது முறையாக பண்ட் பதற்றமாக 90 களில் அவுட்டாகியுள்ளார். இவர் இந்த் போட்டியில் 88 பந்தில் 5 சிக்சர்கள் 9 பவுண்டரிகள் என அதிரடி ஆட்டத்தை கையாண்ட போதும், பேட்ஸ்மேன்களின் பதற்றமாக கருதப்படும் 90களை தாண்ட நிச்சயமாகத் தடுமாறுகிறார் என்பது தெளிவாகவே தெரிகிறது.

முன்னதாக ஹைதராபாத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் பண்ட் 92 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து ராஜ்கோட்டில் நடந்த டெஸ்டிலும் 92 ரன்கள் எடுத்து அவுட்டானார். ரிஷப் பண்ட்டின் இந்த 90 சோகம் இந்திய மண்ணில் மட்டுமில்லாமல் அந்நிய மண்ணிலும் தொடர் கதையாக உள்ளது. சமீபத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரிலும் சிட்னியில் 97, பிரிஸ்பேன் மைதானத்தில் 89*, மற்றும் மெல்போர்ன் மைதானத்தில் 91 எனப் பதற்றமான 90 களில் ரிஷப் பண்ட் தொடர்ந்து அவுட்டாகி வருகிறார்.

இந்நிலையில் ரிஷப் பண்ட்டின் ஆட்டத்தின் ஸ்டைலை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும் ஆனால் கடைசி வரை பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே முன்னாள் வீரர்கள் மற்றும் சக இந்திய வீரர்களின் கருத்தாக உள்ளது.

Views: - 0

0

0