சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் ஜாம்பவான் சச்சின், சேவாக்!

27 February 2021, 7:21 pm
sachin tendulkar - updatenews360
Quick Share

சத்தீஸ்கரில் நடக்கும் சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடருக்கான இந்திய ஜாம்பவான்கள் அணியில் சச்சின், சேவாக் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

சத்தீஸ்கரில் உள்ள ஷாகித் வீர் நாராயன் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த கிரிக்கெட் தொடர் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வைத் தனிநபர்களுக்கு உணர்த்தும் விதமாக இந்த தொடர் நடத்தப்படுகிறது.

கடந்தாண்டு நடந்த இந்த தொடர் முதல் நான்கு போட்டிகள் மட்டும் நடத்தப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் காரணமாகப் பாதியிலேயே கைவிடப்பட்டது. வரும் மார்ச் 5ம் தேதி துவங்கும் இந்த தொடரின் ஃபைனல் போட்டி வரும் மார்ச் 21 ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பட்டியலில் சமீபத்தில் ஓய்வை அறிவித்த இந்திய வீரர்களான யூசுப் பதான், வினய் குமார் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களைத்தவிர இந்திய ஜாம்பவான் சச்சின், முன்னாள் அதிரடி வீரரான சேவாக் ஆகியோரின் பெயர்களும் இதில் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியில் அந்த அணியின் முன்னாள் அதிரடி வீரரான சனத் ஜெயசூர்யாவின் பெயர் இடம் பெற்றுள்ளது. கடந்த 1996 இல் இலங்கை அணி உலகக்கோப்பை வெல்ல ஜெயசூர்யா முக்கிய காரணமாக அமைந்தார்.

இந்திய ஜாம்பவான்கள் அணி தனது முதல் போட்டியில் வங்கதேச ஜாம்பவான்கள் அணியைச் சந்திக்கிறது. இந்த போட்டி வரும் மார்ச் 5 ஆம் தேதி நடக்கவுள்ளது.

இந்திய ஜாம்பவான்கள் அணி:

சச்சின், சேவாக், யுவராஜ் சிங், முகமது கைப், பிரக்யான் ஓஜா, நோயல் டேவிட், முனாப் படேல், இர்பான் பதான் மன்பிரீத் கோனி யூசுப் பதான், நமன் ஓஜா, சுப்ரமணியன் பத்ரிநாத், வினய் குமார்.

இலங்கை ஜாம்பவான்கள் அணி:

திலகரத்னே தில்ஷன், சனத் ஜெயசூர்யா , பர்வேஸ் முஷரப், ரங்கனா ஹெராத், திலன் துஷாரா, அஜந்தா மெண்டிஸ், சமாரா கபுகேந்திரா, உபுல் தரங்கா, சமாரா சில்வா, சிந்தகா ஜெயசிங்கே, தாமிகா பிரசாத், நுவன் குலசேகரா, ரசல் அர்னால்டு, துலஞ்சனா, மலிண்டா வாரான்புரா.

Views: - 13

0

0