முதல் பந்திலேயே சிக்சர்… டி-20 கிரிக்கெட்டில் இமாலய மைல்கல்லை கடந்து அசத்திய ‘டான்’ ரோகித்!

18 March 2021, 7:19 pm
Quick Share

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி-20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா டி-20 கிரிக்கெட்டில் மேலும் ஒரு மைல்கல் சாதனையை கடந்து அசத்தினார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் மூன்று போட்டியின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் நான்காவது டி-20 போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், ராகுல் சஹார் அணியில் சேர்க்கப்பட்டார்.

ரோகித் 9000
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ராகுல் துவக்கம் அளித்தனர். இதில் ரோகித் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அசத்தினார் . இதில் ரோகித் 11 ரன்கள் எடுத்த போது ஒட்டுமொத்த டி -20 கிரிக்கெட்டில் 9000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது இந்தியர் என்ற பெருமை பெற்றார் ரோகித்.

இந்த பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி 9650 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார். சுரேஷ் ரெய்னா 8494 ரன்களும், ஷிகர் தவான் 8102 ரன்களும் அடித்துள்ளனர். மேலும் இந்த போட்டியில் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அசத்தினார் ரோகித். இதன் மூலம் டி-20 இன்னிங்சை இந்திய அணி முதல் முறையாக சிக்சர் அடித்து துவங்கியது. இந்த போட்டியில் ரோகித் சர்மா 12 ரன்கள் அடித்த போது ஆர்ச்சர் வேகத்தில் அவுட்டானார்.

50 வது சிக்சர்
இந்த போட்டியில் இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா 1 பவுண்டரி, 1 சிக்சர் விளாசினார். இதன் மூலம் சொந்த மண்ணில் நடந்த டி -20 போட்டியில் தனது 50 வது சிக்சரை பதிவு செய்தார் ரோகித் சர்மா. இதன் மூலம் சொந்த மண்ணில் நடந்த டி-20 போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் நியூசிலாந்தின் மார்டின் கப்டில் (103 சிக்சர்கள்), கோலின் முன்ரோ (82 சிக்சர்கள்), ஆகியோரைத் தொடர்ந்து ரோகித் சர்மா மூன்றாவது இடம் பிடித்தார்.

டி-20 கிரிக்கெட்டில் முதல் பந்தில் சிக்சர் அடித்த வீரர்கள் பட்டியல்:
கம்ரான் அக்மல்
கரீம் சாதிக்
டுவைன் ஸ்மித் (இரண்டு முறை)
மார்டின் கப்டில்
கோலின் முன்ரோ
ஹஸ்ரத்துல்லா ஜஜாய்
ரோகித் சர்மா

Views: - 18

0

0