வெறும் 3 வெளிநாட்டு வீரர்களுடன் களமிறங்கும் பெங்களூரு: கொல்கத்தா அணி பீல்டிங்!

18 April 2021, 3:10 pm
Quick Share

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 10வது லீக் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இந்தியாவில் 14 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் சென்னை எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் இன்று நடக்கும் 10வது லீக் போட்டியில் கொல்கத்தா அணி, பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் இரு மிகச்சிறந்த அணிகளுக்கு கேப்டனாக திகழும் வீரர்கள் நேருக்கு நேர் மோதுவதால், இன்றைய போட்டியில் ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. பெங்களூரு அணியில் டேனியல் கிறிஸ்டியன் நீக்கப்பட்டு, ரஜத் படிதார் அணியில் சேர்க்கப்பட்டார்.

அணி விவரம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: நிதிஷ் ரானா, சுப்மான் கில், ராகுல் திருப்பதி, இயான் மார்கன், ஷாகிப் அல் ஹாசன், தினேஷ் கார்த்திக், ஆண்ரே ரசல், பாட் கம்மின்ஸ், ஹர்பஜன் சிங், பிரசித் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி.

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், கிளன் மேக்ஸ்வெல், ஏபி டிவிலியர்ஸ், வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அஹமது , கைல் ஜேமின்சன், ஹர்சல் படேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சஹால்.

Views: - 119

0

0