ஹார்ட் அட்டாக்கே வந்திரும் போல…‘பொளந்து கட்டிய பொல்லார்டு’.. சூப்பர் ஓவரில் மும்பையின் கையை விட்டு போன வெற்றி..!

29 September 2020, 12:06 am
Quick Share

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான லீக் ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் மும்பை அணியை போராடி வென்றது பெங்களூரூ அணி.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய பெங்களூரூ அணிக்கு பின்ச் மற்றும் படிக்கல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேப்டன் கோலியை தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களும் பொறுப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். பின்ச் (52), படிக்கல் (54), டிவில்லியர்ஸ் (55 நாட் அவுட்), டுபே (27 நாட் அவுட்) ஆகியோர் ரன்களை குவிக்க, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் சேர்த்தது.

இமாலய இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணிக்கு, கேப்டன் ரோகித் சர்மா, டிகாக், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா சொதப்பினர். இருப்பினும், இஷான் கிஷான், பொல்லார்டு ஆகியோரின் பேட்டிங் பெங்களூரூ அணிக்கு பீதியை ஏற்படுத்தியது. இருவரும் மாறி மாறி பந்துகளை சிக்ஸர்களும், பவுண்டரிகளுக்கும் பறக்க விட்டனர். இருவரும் அரைசதம் அடித்தனர். அதிலும், பொல்லார்டு 19 பந்தில் 50 ரன்களை கடந்தார்.

இறுதி ஓவரில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கிஷான் 2 சிக்சர்களை பறக்க விட்டு ஆட்டமிழந்தார். இதனால், ஒரு பந்துக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, பொல்லார்டு பவுண்டரை அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். இதனால், ஆட்டம் சமனில் முடிந்தது. இஷான் கிஷான் 99 ரன்களும், பொல்லார்டு 60 (நாட் அவுட்) ரன்களும் எடுத்தனர்.

இதைதொடர்ந்து, நடந்த சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த மும்பை அணி 7 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி பெற்றது.

Views: - 10

0

0