மீண்டும் மண்ணைக்கவ்விய ஐதராபாத்… ராஜஸ்தான் அபார வெற்றி!

2 May 2021, 7:22 pm
Quick Share

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இதுவரை கேப்டனாக இருந்த டேவிட் வார்னர், சுசீத் மற்றும் சித்தார்த் காவுல் ஆகியோர் நீக்கப்பட்டு முகமது நபி, புவனேஸ்வர் குமார், மற்றும் அப்துல் சமாத் அணியில் சேர்க்கப்பட்டனர். இதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் உனத்கத்திற்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக தியாகி அணியில் சேர்க்கப்பட்டார். இதேபோல் சிவம் துபேவிற்கு பதிலாக அனுஜ் ரவாத் வாய்ப்பு பெற்றார்.

பட்லர் பிரமாதம்
தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு துவக்க வீரர் ஜாஸ் பட்லர் (124)
சாம்சன் (48) ஆகியோர் கைகொடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 220 ரன்கள் குவித்தது.

சுமாரான துவக்கம்
இமாலய இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மணிஷ் பண்டே 31 ரன்களும், ஜானி பேரிஸ்டோவ் 30 அடித்து சுமாரான துவக்கம் கொடுத்தனர். தொடர்ந்து வந்த கேப்டன் வில்லியம்சன் 20 ரன்னில் வெளியேற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி திணறியது. தொடர்ந்து வந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் வெறும் 8 ரன்னில் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

கேதர் ஜாதவ் மற்றும் முகமது நபி ஆகியோர் 19 மற்றும் 17 ரன்கள் அடித்து ஏமாற்றம் அளித்தனர். பின்வரிசை வீரர்களை அப்துல் சமாத் 10 ரன்களில் வெளியேற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளி பட்டியலில் ஆறு புள்ளிகளை பெற்றது.

Views: - 126

0

0

Leave a Reply