ஆர்சிபிக்கு ‘டாட்டா’ காட்டிய ரூ. 4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் : இந்த முறையும் அவ்வளவுதானா..?

3 September 2020, 5:53 pm
rcb - updatenews360
Quick Share

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல். தொடர் வரும் 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக, ஐ.பி.எல். அணிகள் துபாயில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்ட பிறகு, பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருவதால், ஐ.பி.எல். தொடரின் முதல் வாரத்தில் அவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஒரு சில அணிகள் முக்கிய வீரர்கள் இல்லாமல் தங்களின் முதல் போட்டியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இந்த நிலையில், பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம்பிடித்திருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கேன் ரிச்சர்ட்சன் இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால், துணையுடன் இருக்க விருப்பம் தெரிவித்திருந்தார்.

நடப்பாண்டு ஐ.பி.எல் தொடரில் கேன் ரிச்சர்ட்சனை பெங்களூரூ அணி ரூ.4 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது. ரிச்சர்ட்சனின் விலகல் அந்த அணிக்கு தாக்கத்தை ஏற்படுத்துமா..? இல்லையா..? என்பதை பொருத்திருந்து பார்ப்போம். கேன் ரிச்சர்ட்சனுக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுவரையில் ஐ.பி.எல். கோப்பையை வெல்லாத அணிகளில் இருந்து வரும் பெங்களூரூ அணிக்கு, இந்த முறையும் அவ்வளவுதானா..? என நெட்டிசன்கள் கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

Views: - 0

0

0