ஐபிஎல் ஏலத்தில் ஜாம்பவான் சச்சின் மகன் அர்ஜுன்… மும்பை சீனியர் அணியில் இடம் பிடித்தார்!

15 January 2021, 4:10 pm
sachin son -updatenews360
Quick Share

அரியானா அணிக்கு எதிரான சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரின் போட்டியில் அறிமுகமான ஜாம்பவான் சச்சின் மகன் அர்ஜுன் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கத் தகுதி பெற்றார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாகத் திகழ்ந்தவர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜுன். 21 வயதான இவர், தற்போது சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரின் அரியானா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக அறிமுகமாகியுள்ளார். இதன்மூலம் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க அர்ஜுன் தகுதி பெற்றுள்ளார்.

முன்னதாக சீனியர் அணியில் அர்ஜுன் இடம் பெறவில்லை. ஆனால் பிசிசிஐ அனைத்து அணிகளிலும் இரு வீரர்களைக் கூடுதலாகச் சேர்த்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. இவர்களை பயோ பபுள் என்ற பாதுகாப்பு வளையத்துக்குள் வைத்துக் காயமடையும் வீரர்களுக்கு மாற்று வீரர்களாகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்தது. தவிர, 22 வீரர்களைத் தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் அனுமதி வழங்கியது. இதற்குப் பின் மும்பை அணியில் மூன்று வீரர்கள் சேர்க்கப்பட்டனர்.

இதையடுத்து அர்ஜுன் சீனியர் அணியில் இடம் பிடித்தார். கடந்த சில ஆண்டுகளாக வயதுக்கு ஏற்ப அர்ஜுன் மும்பை அணிக்காக அனைத்து விதமான போட்டிகளிலும் பங்கேற்று வந்தார்.

இதற்கிடையில் இந்தியச் சர்வதேச அணிக்கான வலைப்பயிற்சிக்கான பலராக அர்ஜுன் செயல்பட்டுள்ளார் இவர். கடந்த 2018 இலங்கை அணிக்கு எதிரான பங்கேற்ற 19 வயதிற்கு உட்பட்ட இந்திய அணியிலும் அர்ஜுன் விளையாடி உள்ளார்.மும்பை அணி டெல்லி, ஹரியானா, கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி அணிகள் இடம் பெற்றுள்ள குரூப் – இ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

Views: - 7

0

0