சாரட் குதிரை வண்டியில் வலம் வந்த நடராஜன் : விழாக்கோலம் பூண்ட சின்னப்பம்பட்டி..!! (வீடியோ)

21 January 2021, 6:30 pm
nattu - - updatenews360
Quick Share

இந்திய கிரிக்கெட் பயணத்தில் இதுவரையில் யாருக்கும் கிடைத்திடாத அதிர்ஷ்டம் தமிழக வீரர் நடராஜனுக்கு கிடைத்துள்ளது. ஒரே தொடரில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். அவர் அறிமுகமான 3 ஃபார்மேட்களிலும் அசத்தலான பந்து வீச்சை வெளிப்படுத்தி, ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், இந்திய அணிக்கே புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளார்.

நடராஜன் வெளிநாட்டில் இருந்து வருவதால் அவருடன் கைக்குலுக்கினால், சால்வை அணிவித்தால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாகிவிடும் என சுகாதாரத்துறை வரவேற்புக்கு தடைவிதித்தது.

ஆனால், இதுவரை இந்திய அணி சாதிக்காததை, அவர் அறிமுகமான தொடரில் சாதித்தப் பெருமையுடன் சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டிக்கு வந்த அவருக்கு, ஊர் மக்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். சாரட் குதிரை வண்டியில் அமர வைக்கப்பட்டு, ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அப்போது, இந்திய தேசிய கொடியை அவர் ஏந்தியவாறு, மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.

ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த நடராஜனின் தோலில் இந்திய தேசிய கொடி பறப்பதை காண பெருமையாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Views: - 7

0

0