மகளிர் சேலஞ்ச் டி20 கிரிக்கெட் : ஸ்மிருதி மந்தனா அபாரம் .. முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது டிரைல்பிளேசர்ஷ்..!!!

9 November 2020, 11:48 pm
Quick Share

மகளிர் சேலஞ்ச் டி20 கிரிக்கெட் போட்டியில் சூப்பர் நோவாஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டிரைல்பிளேசர்ஷ் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

சார்ஜாவில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த டிரைல்பிளேசர்ஷ், கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடினார். மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறினாலும், மறுமுனையில் ரன்களை குவித்தார். அவர் மட்டும் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, எஞ்சிய வீராங்கனைகள் ராதா யாதாவின் சுழலில் சிக்கி விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால், 8 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் மட்டுமே சேர்த்தது. சூப்பர் நோவாஸ் சார்பில் ராதா யாதவ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

எளிய இலக்குடன் சூப்பர் நோவாஸ் களமிறங்கினாலும், டிரைல்பிளேசர்ஷ் பவுலர்கள் கடும் சவாலாக விளங்கினர். இதனால், ரன்களை குவிக்க முடியாமல் எதிரணி வீராங்கனைகள் திணறினர். அந்த அணியில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மட்டும் 30 ரன்கள் சேர்த்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேற, 20 ஓவர்களில் அந்த அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

இதன்மூலம், 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டிரைல்பிளேசர்ஷ் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

Views: - 49

0

0