இவரிடம் ‘தல’ தோனி சாயல் உள்ளது: ஜாஸ் பட்லர்!!

29 March 2021, 2:45 pm
Quick Share

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தனி ஒருவனாக போராடிய சாம் கரனிடம் தோனியின் சாயல் இருப்பதாக அந்த அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி புனேவில் நடந்தது. இதில் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய போதும் அந்த அணியின் ஆல்ரவுண்டர் சாம் கரன் 83 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். இங்கிலாந்து அணியை வெற்றிபெற அவரால் முடிந்த அளவு கடுமையாக போராடினார். இவர் 24.2 வது ஓவரில் இங்கிலாந்து அணி 162 ரன்கள் எடுத்த நிலையில் களமிறங்கினார்.


அடுத்தடுத்து வந்த அடில் ரசித் மற்றும் மார்க் வுட் ஆகியோருடன் சேர்ந்து இறுதிவரை போராடிய சாம் கரன் கிட்டத்தட்ட இலக்கை எட்டும் அளவிற்கு கடுமையான போராட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். இதையடுத்து இங்கிலாந்து கேப்டன் பட்லர் போட்டிக்கு பின் கூறுகையில், “இந்த சிறப்பான இன்னிங்ஸ் குறித்து கண்டிப்பாக தோனியுடன் கரன் பேச விரும்புவார் என நினைக்கிறேன். அவரிடம் தோனியின் சாயல் கண்டிப்பாக உள்ளது. அதேநேரம் போட்டியை எதிரணியிடமிருந்து எப்படி எடுத்துச் செல்வது என்ற பொறுப்பை எடுத்துக்கொள்ளும் பொறுப்பும் உள்ளது.

இதனால் ஐபிஎல் தொடர்களில் தோனியுடன் சாம் கரன் இதுபோன்ற ஆலோசனைகளை பெறுவார் என நம்புகிறேன். சர்வதேச அளவில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த பினிஷராக இருந்தவர் தோனி என்பது நம் அனைவருக்கும் தெரியும். தோனி போன்ற மிகச்சிறந்த வீரர்களுடன் எங்கள் அணியை சேர்ந்த வீரர்கள் சேர்ந்து விளையாடி அவர்களின் அனுபவங்களை பெறுவது மிகச் சிறந்த விஷயம் தான். இதனால் சாம் கரணுக்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்”என்றார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த சாம் கரன் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். சென்னை அணி வரும் 10ம் தேதி நடக்கவுள்ள முதல் போட்டியில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

Views: - 68

9

0

1 thought on “இவரிடம் ‘தல’ தோனி சாயல் உள்ளது: ஜாஸ் பட்லர்!!

Comments are closed.