இதயம் கவர்ந்த வீராங்கனையாக சானியா மிர்சா தேர்வு

12 May 2020, 3:20 pm
sania - updatenews360
Quick Share

பெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீராங்கனை சானியா மிர்சா இதயம் கவர்ந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.

மகளிருக்கான பெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் இதயம் கவர்ந்தவர் என்னும் விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் 2 வீராங்கனைகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான ஆசிய-ஓசியானா மண்டலத்தில் இருந்து இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் இந்தோனேஷியாவின் பிரிஸ்கோ நுக்ரோகா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து, இதயம் கவர்ந்த வீராங்கனைக்காக வாக்கெடுப்பு கடந்த ஒரு வாரம் ஆன்லைனில் நடந்தது.

மொத்தம் 16,985 வாக்குகள் பதிவான நிலையில், இந்தியாவின் சானியா மிர்சா 10 ஆயிரம் வாக்குகளை பெற்று இதயம் கவர்ந்த வீராங்கனையாக தேர்வானார். இதன்மூலம், இந்த விருதை பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை சானியா மிர்சா பெற்றார்.

இந்த விருதுடன் கிடைக்கும் ஒன்றரை லட்சம் ரூபாயை தெலுங்கானா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக சானியா மிர்சா அறிவித்துள்ளார்.