சிஎஸ்கே சிக்கல் தீரவே தீராது: இது தல தோனிக்கும் தெரியும்: ஸ்காட் ஸ்டைரிஸ்!

21 January 2021, 6:41 pm
CSK - updatenews360
Quick Share

ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிக்கல் இன்னும் பல ஆண்டுகளுக்குத் தொடரும் என முன்னாள் நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார். தவிர இதை தோனி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

வரும் 2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடக்க உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தக்கவைக்கும் வீரர்கள் மற்றும் விடுவிக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சுமார் 6 வீரர்களை விதித்துள்ளது.

அதில் கேதார் ஜாதவ், ஹர்பஜன் சிங், ஷேன் வாட்சன், பியூஸ் சாவ்லா, முரளி விஜய் மற்றும் மோனு சிங் ஆகியோரை விடுவித்தது. ஆனால் இவர்களை விடுவித்தது மட்டும் அந்த அணியின் பிரச்சனைகளைத் தீர்த்து விடாது என முன்னாள் நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகச் சென்னை அணியில் இளம் வீரர்களை விட அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு முன்னுரிமை அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த உக்தி 2018 மட்டும் 2019 ஆம் ஆண்டுகளில் அந்த அணிக்குச் சிறப்பாக கை கொடுத்ததாகவும், ஆனால் கடந்த ஆண்டில் இது அப்படியே சென்னை அணிக்குப் பெரிய ஆப்பாக அமைந்துவிட்டதாகவும் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறியதைத் தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் தோனி இளம் வீரர்கள் கையில் கொண்டு வர வேண்டுமெனப் பேசியிருந்தார். தற்போது இந்த வீரர்களை மட்டும் வெளியேற்றுவதால் அவர்களின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரச்சனை தீர்ந்து விடாது என்று ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டைரிஸ் கூறுகையில், “எனக்குத் தெரிந்து அவர்களின் கைகள் கட்டப்பட்டு உள்ளது என நினைக்கிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாகச் சென்னை அணியின் கதையைப் பார்க்கும் போது ஓல்ட் இஸ் கோல்ட் என்ற விதத்தில் அனுபவமிக்க வீரர்களுக்கு முன்னுரிமை அளித்து வந்தது. ஆனால் தற்போது இளம் வீரர்களை அணியில் எடுக்க வேண்டுமென ஒரு சில வீரர்களை மட்டும் வெளியேற்றியுள்ளது. கேப்டன் தோனி கடந்த ஆண்டு இறுதியில் இளம் வீரர்கள் கையில் அணி செல்ல வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் அது எங்கிருந்து வரும் என்று எனக்குத் தெரியவில்லை.

சிஎஸ்கே மிகப்பெரிய சிக்கலில் உள்ளது. தற்போது அந்த அணி வெளியேற்றிய வீரர்கள் மட்டும் தான் மூத்த வீரர்கள் என்று நினைக்கின்றனர். ஆனால் இன்னும் அந்த அணியில் ஒரு சில வயதான மூத்த வீரர்கள் உள்ளனர். அந்த அணிக்கு மிகப் பெரிய பக்கபலமாக இருந்த டாப் ஆர்டர் தற்போது இல்லை. துவக்க வீரர்கள் பெரிய அளவில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றது கிடையாது. அதனால் இந்த முறை சிஎஸ்கே அணி கடினமாகப் பாடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதில் இந்த ஏலம் மிக முக்கிய பங்கு வகிக்கும். ஆனால் சென்னை அணியின் சிக்கலைப் பொருத்தவரை, இன்னும் சில ஆண்டுகளுக்குத் தொடரும் என்றே தெரிகிறது” என்றார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ஏலத்துக்கு முன்பாக ரூபாய் 22.9 கோடி வைத்துள்ளது. அதேபோல 7 உள்ளூர் வீரர்களுக்கான இடத்தையும் ஒரு வெளிநாட்டு வீரருக்கான இடமும் உள்ளது. இந்த இடங்களை தற்போது நடக்கவுள்ள மினி ஏலம் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிரப்ப உள்ளது. இதில் இளம் வீரர்கள் சிலர் எடுக்க எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது எனத் தெரிகிறது.

Views: - 0

0

0