இவர் எவ்வளவு தப்பு செஞ்சாலும்… சேவாக் மாதிரி பல போட்டிகளை இந்தியாவிற்கு வெல்வார்: மைக்கேல் வாகன்!

5 February 2021, 10:27 am
Quick Share

இந்திய அணிக்காக ஒரு காலத்தில் சேவாக் என்ன செய்தாரோ அதைத்தான் தற்போது இளம் ரிஷப் பண்ட் செய்துவருகிறார் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் மைக்கேல் வாகன் எதிரணியின் பவுலர்கள் மீது தனது ஆதிக்கத்தைச் செலுத்தும் தகுதி படைத்தவர் பண்ட் என தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் இளம் வீரரான ரிஷப் பண்ட், இந்திய அதிரடி துவக்க வீரராக திகழ்ந்த விரேந்த சேவாக்கிற்கு இணையான எதிர் தாக்குதல் நடத்தும் திறமை கொண்டவராக உள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் இந்திய அணிக்காக சேவாக் என்ன செய்தாரோ அதைத்தான் தற்போது ரிஷப் பண்ட் செய்து வருவதாக வாகன் தெரிவித்துள்ளார். குறிப்பாக எதிரணி பவுலர்கள் மீது அச்சத்தை அச்ச உணர்வை ஏற்படுத்தும் திறமை அவரிடம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். தற்போது சிறு சிறு தவறுகள் செய்தாலும் இந்திய அணிக்காகப் பல போட்டிகளை வென்றுள்ளார் என்றார். இதுகுறித்து வாகன் கூறுகையில், “எதிரணி பவுலர்களுக்கு அச்ச உணர்வை ரிஷப் பண்ட் ஏற்படுத்துவார். சேவாக் தனது காலத்தில் என்ன செய்தாரோ தற்போது ரிஷப் பண்ட அதே பணியைச் செய்து வருகிறார்.

சில நேரங்களில் அவர் சிறு சிறு தவறுகள் செய்து, தனது விக்கெட்டை இழந்து வருகிறார். ஆனால் பல முறை இந்திய அணிக்காகப் போட்டிகளை வென்று வருகிறார். சக போட்டியாளரான பென் ஸ்டோக்ஸ் உடன் ரிஷப் பண்ட் களம் இறங்குவது பார்ப்பதற்குச் சுவாரஸ்யமாக இருக்கும். பண்ட் பேட்டிங் செய்யும் போது நான் கட்டாயமாகப் பார்ப்பேன். ஆனால் பிறகு போட்டியைப் பார்க்க மாட்டேன், ஏனென்றால் அதற்குப் பின் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இதே மாதிரி உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் பண்ட் பட்சத்தில் எதிரணி பவுலர்களுக்கு நிறையச் சவால்கள் அளிக்கமுடியும்” என்றார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவின் ரிஷப் பண்ட் இரண்டு முறை தனது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் விதத்திலான பேட்டிங்கில் ஈடுபட்டார். பிரிஸ்பேன் மைதானத்தில் அவர் ஆடிய விதம் இந்திய அணி புது வரலாறு படைக்க காராணமாக அமைந்தது. இவரது சிறப்பான ஆட்டம் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணுபவ வீரரான சகாவிற்குப் பதிலாக ரிஷப் பண்ட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0