“ம்ம்மா“ என்ற குரல் : செரீனாவுக்கு உற்சாகமூட்டிய மகள்!!

8 September 2020, 2:05 pm
Serena Daughter Love - updatenews360
Quick Share

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று காரணடமாக குறைந்த பார்வையாளர்கள் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. குறைந்த அளவிலான ரசிகர்கள் கொண்டே போட்டிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் காலிறுதிக்கு தகுதி பெற்றார். மரியா சக்கரிக்கு எதிரான ஆட்டத்தில் அவரை 6-3, 6-7(6), 6-3 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

எப்போதும் செரீனா வில்லியம்ஸ் பங்கேற்கும் ஆட்டத்தில் பரபரப்புக்கும், ரசிகர்களின் ஆரவாரத்திற்கும் பஞ்சம் இருக்காது. ஆனால் குறைந்த கூட்டம் என்பதால் ஓரளவு ஆராவாரம் தென்பட்டது. ஆனால் அதையெல்லாம் தாண்டி வந்த ஒரு சப்தம் செரீனாவை உற்சாகமூட்டியது.

பார்வையாளர்கள் இருக்கையில் தந்தையுடன் அமர்ந்திருந்த செரீனாவின் மகள் ஒலிம்பியா, மைதானத்தில் உள்ள பெரிய திரையில் செரீனாவை பார்த்ததும் “ம்ம்மா“ என அழைத்தார். அப்போது இடைவேளையில் இருந்த செரீனா குழந்தையை பார்த்து கையை அன்பாக அசைத்தார்.

மைதானத்தில் ஒரு பாசப்போராட்டம் நடந்த இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இது குறித்து பேசிய செரீனா, தன் மகள் வந்ததை மறந்து விளையாட்டில் கவனம் செலுத்தியிரந்தேன். நான் நாட்டுக்கு போராடுவதை அவள் பார்த்திருப்பாள் என நெகிழ்ச்சியடைந்தார்.

Views: - 9

0

0