கிரிக்கெட்டில் இருந்து பிரியாவிடை பெற்றார் வாட்சன் : டுவிட்டர் டிரெண்டிங்கில் #ThankYouWatson !!

2 November 2020, 6:42 pm
shane watson 1- updatenews360
Quick Share

சென்னை : அனைத்து வகையான கிரிக்கெட் தொடர்களிலும் ஓய்வு பெறுவதாக சென்னை அணியின் வீரர் வாட்சன் அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல் ரவுண்டர்களில் ஒருவராக வலம் வந்த ஷேன் வாட்சன், ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். இருப்பினும், ஐபிஎல் உள்ளிட்ட சர்வதேச டி20 தொடர்களில் மட்டும் தொடர்ந்து விளையாடி வந்தார். ஐபிஎல்லில் முதலில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய அவர், பின்னர் பெங்களூரூ, சென்னை (2018 முதல்) அணிகளுக்காக ஆடினார்.

3 சீசன்களாக சென்னை அணிக்காக விளையாடி வரும் இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஆனால், நடப்பு சீசனில் சொல்லும்படியான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தவில்லை. சென்னை அணி பிளே ஆஃபிற்கு செல்ல முடியாமல், லீக் ஆட்டத்தோடு வெளியேறியதற்கு இவரது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தாததும் ஒரு காரணமாகும்.

இந்த நிலையில், அனைத்து வகையான போட்டிகளில் இருந்து ஷேன் வாட்சன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான முடிவை சென்னையின் சக வீரர்களிடம் அவர் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகறிது. ஐபிஎல்லில் இதுவரை 145 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 43 போட்டிகள் சென்னை அணிக்காக விளையாடியுள்ளார். மேலும், ஓய்வு பெற்றாலும் அவர் சென்னை அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக இருப்பார் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, வாட்சனை மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைக்கும் விதமாக, டுவிட்டரில் #ThankYouWatson என்ற ஹேஸ்டேக்கை சென்னை அணியின் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Views: - 50

0

0