11 மணி நேர ரோடு பயணம் மேற்கொண்டு இந்திய டீமுடன் இணையும் ஷிகர் தவன், ஸ்ரேயாஸ்!

2 March 2021, 9:33 pm
Quick Share

இங்கிலாந்துக்கு எதிரான டி-20 போட்டியில் பங்கேற்க இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவன் ஆகியோர் அகமதாபாத் புறப்பட்டனர். 


இங்கிலாந்து அணிக்கு எதிரான இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க இந்திய அணியின் வீரர்களான ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் அகமதாபாத் புறப்பட்டுச் சென்றனர். இவர்கள் இருவரும் தற்போது ஜெய்ப்பூரிலிருந்து அகமதாபாத் சென்றுள்ளனர்.  வரும் மார்ச் 12ம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி துவங்குகிறது
ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ஷிகர் தவான்  தற்போது விஜய் ஹசாரே டிராபி தொடரில் டெல்லி மற்றும் மும்பை அணிக்காக விளையாடி வந்தனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியிடன் இணைய சுமார் பதினோரு மணி நேரம் ரோடு பயணம் மேற்கொண்டு அகமதாபாத் சென்றடைய உள்ளதாக ஸ்ரேயாஸ் அய்யர் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் ஷிகர் தவான் உடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தைப் பகிர்ந்து, “அகமதாபாத்திற்கு 11 மணி நேர ரோடு பயணம். இந்த புன்னகை கடைசிவரை உள்ளதா என்பதைப் பார்ப்போம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதேபோல ஷிகர் தவானும் தனது டிவிட்டர் பக்கத்தில் அகமதாபாத் பயணம் குறித்துப் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் “மிகவும் கூலாக விளையாடினீர்கள் மிஸ்டர் ஸ்ரேயாஸ். மீண்டும் இந்திய அணியுடன் இணைவது மகிழ்ச்சியாக உள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.

விஜய் ஹசாரே டிராபி தொடரில் தவான் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மகாராஷ்டிரா எதிராக டெல்லி அணி 330 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய போது 118 பந்தில் 153 ரன்கள் எடுத்தார் தவன். இதேபோல் ஸ்ரேயாஸ் அடுத்தடுத்து இரண்டு சதங்கள் விளாசி மிரட்டினார். மகாராஷ்டிரா அணிக்கு எதிராக 103 ரன்களும். ராஜஸ்தான் அணிக்கு எதிராக 116 ரன்களும் அடித்து அசத்தினார் ஸ்ரேயாஸ்.

டி-20 அணி விவரம்: 
விராட் கோலி (கே), ரோஹித் சர்மா (து.கே), கே.எல் ராகுல், ஷிகர் தவன், ஸ்ரேயஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட்(வி.கீ), இஷான் கிஷான் (வி.கீ) , சஹால், வருண் சக்கரவர்த்தி, அக்‌ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ராகுல் திவாதியா,  நடராஜன், புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், நவ்தீப் சாய்னி, சார்துல் தாகூர். 

டி-20  அட்டவணை

மார்ச் – 12: முதல் டி-20, அகமதாபாத்

மார்ச் – 14: இரண்டாவது டி-20, அகமதாபாத்

மார்ச் – 16: மூன்றாவது டி-20, அகமதாபாத்

மார்ச் – 18: நான்காவது டி-20, அகமதாபாத்

மார்ச் – 20: ஐந்தாவது டி-20, அகமதாபாத்

Views: - 5

0

0