தோனி வழியில் செல்ல விரும்புகிறேன் : தென்னாப்ரிக்க அணியின் முன்னணி வீரர் பேராசை..!
14 September 2020, 7:52 pmஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு ரசிகர்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ளனர். தனது அனுபவங்களை எதிரணியினருக்கு கூட சொல்லிக் கொடுக்கும் மனம் கொண்டவர். இப்படி, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள அவர் யாரும் எதிர்பார்க்காத நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த மாதம் ஓய்வை அறிவித்தார். இது ரசிகர்களும் மீள முடியாத அதிர்ச்சியை கொடுத்தது.
இனி ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மட்டும் விளையாடும் அவரைப் பற்றிய செய்திகள் வெளிவராதா..? என ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், தோனியை நினைவு கூறும் விதமாக, தென்னாப்ரிக்கா அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக டேவிட் மில்லர் சில கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
அதில், உலகின் தலைசிறந்த ஃபினிஷராக தோனி இருந்து வருகிறார். அவரை போட்டியை வெற்றிகரமாக முடிப்பதை போல, நானும் முடிக்க விரும்புகிறேன். அவரது அமைதி அவரை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருப்பதை உணர முடியும். அவரிடம் இருக்கும் திறனை வெளியிட நானும் முயற்சிப்பேன். தோனி தன்னுடைய பலம், பலவீனத்தை அறிந்து செயல்படுவார். அவரைப் போன்று ஆட வேண்டும் எனக் கூறுவதை விட, அவர் முடித்து வைத்துள்ள இன்னிங்ஸ்கள் என்னை ஆச்சர்யப்படுத்துகின்றன,” என்றார்.
0
0