முழங்கையில் காயம் : தென்னாப்ரிக்கா தொடரில் இருந்து விலகிய ஆஸி., அதிரடி வீரர்

12 February 2020, 5:04 pm
Australia - updatenews360
Quick Share

முழங்கையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக தென்னாப்ரிக்கா கிரிக்கெட் தொடரில் இருந்து ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் விலகியுள்ளார்.

ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்காவில் இந்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் வரும் 21-ம் தேதி தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரும் நடக்கிறது.

இந்தத் தொடருக்கான ஆஸ்திரேலியா வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டு, பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஆஸ்திரேலியா அணியில் இடம்பிடித்திருந்த அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் திடீரென இந்தத் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். முழங்கையில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக இந்தத் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக, டி’ஆர்கி ஷார்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.