கடைசி ஐந்து ரன்னிற்கு நான்கு விக்கெட்களை இழந்த இங்கிலாந்து அணி…! ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிப்பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி…!

13 February 2020, 11:09 am
Quick Share

இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரின் முதல் ஆட்டம் நேற்று நடைப்பெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிப்பெற்றது. இங்கிலாந்து அணித் தனது கடைசி ஐந்து ரன்களுக்கு நான்கு விக்கெட்களை இழந்தது குறிப்பிடத்தக்கது.


டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசியது. தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்களான தெம்பா பாவுமா 41 ரன்களும் குயின்டன் டீ காக் 31 ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்பினார். இருபது ஓவர்கள் முடிவில் அந்த அணி எட்டு விக்கெட்கள் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தனர். கிறிஸ் ஜோர்டன் இரண்டு விக்கெட்கள் எடுத்தார்.


அதற்கடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரரான ஜேசன் ராய் அபாரமாக விளையாடி 71 ரன்கள் எடுத்தார். இடைநிலை ஆட்டக்காரரான மோர்கன் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் அந்த அணி தடுமாற்றத்தை சந்தித்தது. மிகவும் சாமார்த்தியமாக இறுதி ஓவர் வீசிய லுங்கி நிங்கிடி மூன்று விக்கெட்கள் எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிப்பெற செய்தார்.

Leave a Reply