பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ரபெல் நடால்…!!!

10 October 2020, 9:04 am
rafeal nadal - updatenews360
Quick Share

பாரீஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி போட்டி ஒன்றில் 12 முறை சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபெல் நடால் , 14-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினாவை சேர்ந்த டிகோ ஸ்வாட்ஸ்மேனை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ரபெல் நடால் 6-3, 6-3, 7-6 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று 13-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதி போட்டியில் செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச், கிரீஸ் நாட்டை சேர்ந்த சிட்சிபாஸ் ஆகியோரில் ஒருவரை நடால் எதிர்கொள்ள உள்ளார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருப்பவருமான அமெரிக்காவின் சோபியா கெனின், போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்கை எதிர்கொள்கிறார்.

19 வயதான ஸ்வியாடெக், தொடரில் தனது அனைத்து ஆட்டங்களிலும் எந்த ஒரு செட்டையும் இழக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் வீராங்கனைக்கு ரூ.14 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது.