ஸ்பெயின் கிராண்ட் ப்ரிக்ஸ் மோட்டர் சைக்கிள் பந்தயம் – ஜப்பான் வீரர் சாம்பியன் பட்டம்…!!

16 November 2020, 1:16 pm
jappan - updatenews360
Quick Share

மேட்ரிட்: ஸ்பெயின் கிராண்ட் ப்ரிக்ஸ் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் உலக சாம்பியன் பட்டம் வென்று ஜப்பான் வீரர் சாதனை படைத்துள்ளார்.

ஸ்பெயின் கிராண்ட் ப்ரிக்ஸ் மோட்டார் சைக்கிள் பந்தய தொடர் அந்நாட்டில் உள்ள வெலன்சியா நகரில் நடைபெற்றது. இந்த பந்தயத்தில் பல்வேறு உலக நாடுகளில் இருந்து மோட்டார் சைக்கிள் பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தய போட்டியில் ஜப்பானிய வீரர் ஜோன் மிர் வெற்றி பெற்று தனது முதல் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டி சென்றுள்ளார். மேலும் கடந்த 20 ஆண்டுகளுக்கு பின் பட்டம் வென்ற முதல் ஜப்பானிய வீரர் என்ற சிறப்புக்கும் சொந்தக்காரர் ஆனார்.

23 வயதான ஜோன் மிர், தனது வெற்றி குறித்து பேசியுள்ளார். இந்த வெற்றி தனது வாழ்வில் மறக்க முடியாதது என்றும் இதற்காக கடுமையாக உழைக்க வேண்டி இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே பந்தயத்தைக் காண அனுமதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 44

0

0