கிரிக்கெட் ரசிகர்களே ரெடியா? இந்தியா – ஆஸ்திரேலியா போட்டியை நேரில் காண பார்வையாளர்களுக்கு அனுமதி

10 November 2020, 7:49 pm
Aus Match - Updatenews360
Quick Share

ஆஸ்திரேலியா : அடிலெய்டில் நடைபெறும் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் பகலிரவு டெஸ்ட் போட்டியை காண பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டடுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் நாடுகள் ஸ்தம்பித்தன. மெல்ல மெல்ல கொரோனா வீரியம் குறைந்ததன் காரணமாக பல நாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டது.

இதில் விளையாட்டு போட்டிகளை பார்வையாளர்கள் இல்லாமலே நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் விளையாட்டு போட்களை காண முடியாமல் ரசிகர்கள் தவித்திருந்தனர்.

இந்த நிலையில் வரும் டிசம்பர் மாதம் 17ஆம் தேதி இந்திய – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியை காண பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அடிலெய்ட் மைதானத்தில் 55 ஆயிரம் இருக்கைகள் உள்ளன. இந்த நிலையில் 27 ஆயிரம் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Views: - 42

0

0