இதான் இப்போ செம்ம வைரல் ரிஷப் பண்ட் பாடிய ஸ்பைடர் மேன் பாடல்!

18 January 2021, 8:17 pm
Rishabh Pant - Updatenews360
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் 16 ரிஷப் பண்ட், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது நாள் ஆட்டத்தின்போது பாடிய ஸ்பைடர்மேன் பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சிட்னி நடந்த 3வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் அந்த அணிக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் விளையாடினார். இதில் அவர் சதத்தைத் தவறவிட்ட போதும், அவரின் போராட்டத்திற்காகப் பலரும் அவரை புகழ்ந்தனர். இதற்கிடையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இவர், ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னுடன் களத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது மிகப்பெரிய தலைப்பு செய்தியாக வெளியானது.

அப்போது முதல் விக்கெட் கீப்பிங்கின் போது பொழுது போக்காக ஏதாவது விஷயத்தை ரிஷப் பண்ட் செய்து கொள்வதை வழக்கமாக வைத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய சுழற்பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் பவுலிங்கில், பெயின் பேட்டிங் செய்துகொண்டிருந்தார். அப்போது விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ‘வலையை இப்படி விசு’ என நக்கலாக பெயினை கிண்டல் அடித்ததோடு, தொடர்ந்து ஸ்பைடர்மேன்.. ஸ்பைடர்மேன் … என அதே தொனியில் அவரை கிண்டல் செய்தார். இது ஸ்டெம்பிள் உள்ள மைக்கில் பதிவானது.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் மிகவும் பரபரப்பாகவும் போராட்டத்துடனும் சீரியசாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இதைப் பொழுது போக்கு அம்சம் கொண்ட போட்டியாகவும் பண்ட் மாற்றியுள்ளார். ரிஷப் பண்ட் பாடிய இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற ஆஸ்திரேலிய அணி 328 ரன்கள் நிர்ணயித்துள்ளது. நான்காம் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்திருந்தது. இன்னும் ஒருநாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இந்த போட்டியின் டிராவை நோக்கி அதிகம் செல்ல வாய்ப்புள்ளது எனப் பலரும் தெரிவிக்கின்றனர்.

ஆஸ்திரேலிய அணி வெற்றிக்காகக் கடுமையாகப் போராட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது இந்திய அணி. ஒருவேளை இந்த போட்டி டிராவில் முடிந்தால் இரு அணிகளும் கோப்பையைப் பகிர்ந்து கொள்ளும் நிலை உருவாகும். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று தொடர் தற்போது 1 – 1 சமநிலையில் உள்ளது.

Views: - 5

0

0