20/20-யும் போரு…! அதுக்குல்ல 10 ஓவர் லீக்கை அறிமுகம் செய்யும் அண்டை நாடு..!

9 September 2020, 5:29 pm
cricket - updatenews360
Quick Share

கிரிக்கெட் போட்டிகள் மீதான ரசிகர்களின் ஆர்வம் டெஸ்ட், 50 ஓவர் மற்றும் 20 ஓவர் என நாளுக்கு நாள் சுருங்கிக் கொண்டே செல்கிறது. டெஸ்ட் தொடரை அழிய விடக் கூடாது என்பதற்காக, அனைத்து நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் முடிவு செய்து, போட்டிகளை நடத்தி வருகின்றன. இதற்காக, டெஸ்ட் சாம்பியன்ஸ் டிராபியையும் ஐ.சி.சி. அறிமுகம் செய்துள்ளது.

இதனிடையே, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக லங்கா பிரீமியர் கிரிக்கெட் தொடர் நவ.,14ம் தேதி முதல் டிச.,6ம் தேதி வரை இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒத்திவைத்துள்ளது.

இந்த நிலையில், வரும் டிசம்பர் மாதம் 10 ஓவர் கிரிக்கெட் லீக்கை நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. நேற்று நடந்த நிர்வாகிகள் கமிட்டி கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதை தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் ஒவ்வொரு அணிகளும் தலா ஆறு வெளிநாட்டு வீரர்களை ஏலம் எடுக்க அனுமதி வழங்கப்படும். அணியின் பெயர்கள் மற்றும் நடைபெறும் இடங்கள் இதுவரை முடிவு செய்யப்படவில்லை.

Views: - 0

0

0