இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து!

25 January 2021, 7:53 pm
root - updatenews360
Quick Share

இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

இலங்கை சென்ற இங்கிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. காலேவில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 164 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்தியது. இப்போட்டியில் இங்கிலாந்து வீரர் டாம் சிப்ளே அரைசதம் அடித்து அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் இலங்கை மண்ணில் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக தனது 6 ஆவது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

முன்னதாக இலங்கை அணியை இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 126 ரன்களில் சுருட்டியது. இதன் மூலம் இந்திய அணிக்கு எதிரான தொடரில் வெற்றி வெற்றி பெற்ற உற்சாகத்துடன் இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது. இதற்கிடையில் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி முதலில் நான்கு விக்கெட்டுகளை 89 ரன்களுக்கு இழந்து திணறியது. இதன் பின் சுதாரித்த சிப்ளே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் இன்றைய ஆட்டத்தின் துவக்கத்தில் வெறும் 5 ரன்கள் கூடுதலாக சேர்த்து நிலையில் இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 344 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆனால் ஒரே ஒரு சீசனில் அந்த அணியின் டாம் பெஸ் மற்றும் ஜாக் லீச் ஆகியோர் தலா 4 விக்கெட் கைப்பற்ற போட்டி இலங்கை அணியின் கையை விட்டு சென்றது. கடந்த வாரம் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
இதன் மூலம் இங்கிலாந்து அணி இந்தாண்டை வெற்றியுடன் துவங்கியது.

Views: - 8

0

0