இலங்கை டி20 அணிக்கு புதிய கேப்டன் தேர்வு : இந்த முறையாவது கைகொடுக்குமா..?

5 June 2021, 5:41 pm
kushal perara - updatenews360
Quick Share

இங்கிலாந்திற்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி பங்கேற்க இருக்கிறது. இந்தத் தொடர் வரும் 23ம் தேதி தொடங்குகிறது.

இலங்கை அணியின் டி20 அணிக்கு மலிங்கா கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கடந்த சில மாதங்களாக பயிற்சி முகாமில் கலந்து கொள்ளவில்லை. எனவே, அவருக்கு பதிலாக ஷனகா கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், இலங்கை அணியின் டி20 அணிக்கு புதிய கேப்டனா குஷால் பெராரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் பெராரா தலைமையில் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய இலங்கை, 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

இலங்கை அணிக்காக 22 டெஸ்ட்கள், 104 ஒருநாள் போட்டிகள், 47 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள பெராரா, எவ்வாறு அணியை வழிநடத்தி செல்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Views: - 335

0

0

Leave a Reply