தோனியின் திறமை நாட்டிற்கு தேவை : தேர்தலில் களமிறங்க பாஜக மூத்த தலைவர் அழைப்பு.!!

16 August 2020, 1:48 pm
Dhoni Su Samy - Updatenews360
Quick Share

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று தனது ஓய்வை அறிவித்தார். தெடர்ந்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்தார்.இந்த நிலையில் தோனியின் ஓய்வை அடுத்து சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாஜக மூத்த தலைவரில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “தோனி கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெற்றுள்ளாரே தவிர வேறு எதிலிருந்தும் இல்லை. என்ன தடை வந்தாலும் போராடும் திறன் கொண்ட தோனியின் திறமை பொதுவாழ்விற்கு வேண்டும். வரும் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அவர் போட்டியிட வேண்டும்“ என கோரிக்கை வைத்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் கருத்திற்கு , எம்எஸ் தோனி பதில் கூறுவாரா, அல்லது செயலில் இறங்குவாரா என்பது பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.